Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மினி லாரியை முந்த முயன்ற கார்…. சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து….. நொடியில் தப்பிய உயிர்கள்….. பெரும் பரபரப்பு….!!!

சேலத்தில் இருந்த புறப்பட்ட கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எலவானா சூர்க்கோட்டை புறவழிச்சாலை இருவழிப்பாதையில் கார் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற கொண்டிருந்த மினி லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது திடீரென மினிலாரியின் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய இரு சக்கர வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் அலறினர்.

இவர்கள் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த கொண்டிருந்த கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷர்வன் குமார் விபத்தை பார்த்ததும் காரை நிறுத்தி இறங்கி வந்தார். அதன் பிறகு 108 ஆம்புலன்சை வரவைத்து விபத்தில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிந்த கள்ளக்குறிச்சி கலெக்டரின் மனிதநேய செயல் பொதுமக்களிடையே நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |