Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சாயிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் பிக்”…. குவியும் லைக்ஸ்….!!!!!

நடிகை சாயிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆர்யா அறிந்தும் அறியாமலும், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், டெடி, சார்பட்டா பரம்பரை முதலான அதிக திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதத்தில் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு சென்ற வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு எந்த திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருக்கின்றார் சாயிஷா. இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் தனது கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் கமெண்ட் ஆப்ஷனை ஆப் செய்து இருக்கின்றார். இருப்பினும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |