ஆறுகள் குளம் நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆடி பதினெட்டாம் பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விவசாயிகள் நம்பிக்கையோடு ஆடி பட்டம் தேடிப் பார்த்தாலும் விதைக்கணும் என்கிற பாடல் வரிகளுக்கு ஏற்ப விவசாயிகள் பட்டம் பார்த்து விதை விதைக்கின்றார்கள். மேலும் ஆற்றங்கரைகளில் மக்கள் ஒன்று கூடி ஆற்று பெருக்கை பார்த்து ரசித்து வருகின்றனர். இதற்கு இடையே வாழை மட்டையில் விளக்குகளை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்யப்படுகின்றது.
பொள்ளாச்சி, ஆனைமலை, வேட்டைக்காரன் புதூர் பகுதிகளில் இன்றும் பாரம்பரிய மாறாமல் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகின்றது. தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வாங்கி கொண்டாடுவது போல ஆடிப்பெருக்கு பாபட்டான் குழல் விளையாட்டு என்பது இன்னும் பழமை மாறாமல் இருக்கிறது. காய்களை வைத்து அடித்து விளையாடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் விளையாட்டாக இருக்கிறது. ஆனைமலை பகுதியில் குழந்தைகள் ஆர்வமுடன் பாப்பட்டான் குழலை வாங்கி செல்கின்றார்கள். இது பற்றி குழல் தயாரிக்கும் தொழிலாளர்கள் பேசிய போது ஆடிப்பெருக்கு இரண்டு மாதம் முன்புதான் குழல் தயாரிக்கும் வேலையை தொடங்குவோம்.
மிகவும் கடினமான வேலைதான் இதனை இயற்கையாக உருவாகும் மூங்கில் பனை ஓலையை வாங்கி பாப்பட்டான் குழல் தயாரிக்கப்படுகிறது. தற்போது காலப்போக்கில் ஏற்ப குழந்தைகளை கவருவதற்காக பலவண்ணங்களில் குழல்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு என்றால் ஆனைமலை வேட்டைக்காரன் புதூர் பகுதிகளில் பாபட்டான் குழல் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்த குழல் வேறு எந்த பகுதியிலும் கிடைக்காது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக ரூ.7 க்கு விற்பனையானது. ஆனால் அப்போது சுமார் 30 பேர் வரை இந்த தொழிலை செய்து வந்தனர்.
தற்போது இந்த தொழிலை ஒரு சிலர் மட்டுமே செய்து வருகின்றார்கள். குழந்தைகளுக்கு பாபட்டான் குழல் பற்றி தெரிவதில்லை அதனால் பெற்றோர் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் மேலும் பாரம்பரியாம் மாறாமல் இருப்பதற்கு இந்த தொழிலை செய்து வருகின்றோம். இதற்கு முன்னாடி ஆடி பெருக்கு என்றால் 700 பாபட்டான் குழல் தயாரிப்போம். ஆனால் தற்போது குறைந்த அளவே தயாரிக்கப்படுகிறது. ஒரு குழல் ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.