பிரபல கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியலில் நடிகரான சந்தன் குமார் தற்போது ஸ்ரீமதி ஸ்ரீனிவாஸ் என்ற நாடகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கான படபிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ஒளிப்பதிவாளரிடம் சந்தன்குமார் ஏதோ கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டெக்னீசியன் நடிகர் சந்தன் குமாரை அனைவரது முன்னிலையிலும் அடித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு இருந்த பட குழுவினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர் . ஆனால் தனது செயலுக்கு நடிகர் சந்தன் குமார் மன்னிப்பு கேட்ட பிறகும் சுமுக முடிவு வரவில்லை.
కన్నడ సీరియల్ నటుడు చందన్ పై దాడి దృశ్యాలు#Chandankumar #srimathisrinivas pic.twitter.com/xewQ76Q4nA
— Asianetnews Telugu (@AsianetNewsTL) August 1, 2022
இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் சந்தன் குமார் தெரிவித்ததாவது:” இது ஒரு சிறிய சம்பவம். அப்போது நான் கொஞ்சம் டென்ஷன் ஆக இருந்தேன். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை இதய பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த நேரத்தில்தான் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் வந்தேன். இங்கு முறையான படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனால் எனக்கு தலைவலி வந்தது. படப்பிடிப்பில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு தூங்க சென்றேன். இதனால் படப்பிடிப்பின் போது பிரச்சினை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.