Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில்வேயில் வேலை ரெடியா இருக்கு” 16 பேரிடம் 64 லட்சம் அபேஸ்…. கணவன்-மனைவிக்கு வலைவீச்சு….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி  பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜமுனா என்ற பெண் தன்னுடைய உறவினர்களுடன் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் என்னுடைய கணவர் 12 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டதாகவும், நான் என் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். அதன்பிறகு என்னுடைய மருமகனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக என் மகனின் பள்ளி தோழன் ஒருவர் கூறினார். இதை நம்பி நானும் அந்த நபரிடம் வேலைக்காக ரூபாய் 4 லட்சம் பணத்தை கொடுத்தேன். அந்த நபர் பணம் கொடுத்தும் வேலை வாங்கி தரவில்லை. இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டபோது ரயில்வேயில் குழுவாகத்தான் வேலை இருக்கிறது என்றும், வேறு சிலரை அழைத்து வாருங்கள் என்றும் கூறினார்.

இதை நம்பி நானும் என்னுடைய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என 16 பேரிடம் பணத்தை வாங்கி அவரிடம் கொடுத்தேன். அந்த நபர் தன்னுடைய மனைவி மருத்துவராக இருப்பதாக என்னிடம் கூறினார். நாங்கள் வேலைக்காக மொத்தம் 64 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளோம். இந்நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்ட கணவன்-மனைவி 2 பேரும் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். எனவே கணவன்-மனைவி 2 பேரையும் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து எங்களுடைய பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Categories

Tech |