Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம்…..!!!!!!!!

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளர்களின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வெவ்வேறு இடங்களில் இடம்பெறுதலை தவிர்க்கவும் வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1 ம் தேதி முதல் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தானாக முன்வந்து http://www.nvsp.in இணையதளத்திலும் voter helpline  என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கொண்டு வரும் படிவம் 6- பி யினை பூர்த்தி செய்து கொடுத்து தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்காளர் உதவி மையம், இ சேவை மையம், மக்கள் சேவை மையம் மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் அலுவலர்களை அணுகியும் ஆதார் எண்ணை சமர்ப்பித்து அதனை வாக்காளர் அடையாள அட்டை என்னுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |