Categories
உலக செய்திகள்

திடீரென வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்…. 6 ராணுவ வீரர்கள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கனமழை பெய்து வருவதால் பலுச்சிஸ்தான் மாகாணம் வெள்ளப் பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் ராணுவம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் குவெட்டா பகுதியில் இருந்து கராச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. இதில் 1 உயர் அதிகாரி உள்பட 6 ராணுவ வீரர்கள் இருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் லாஸ்பேலா‌ பகுதிக்கு சென்ற போது கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஹெலிகாப்டருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இதன் காரணமாக ராணுவ வீரர்கள் காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது மோசமான வானிலையின் காரணமாக ஹெலிகாப்டர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ராணுவ வீரர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |