சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வரும் கூலித்தொழிலாளி விபத்தில் படுகாயம் அடைந்து இறந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் சங்கரன்கோவிலில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான விருதுநகர் செல்ல முடிவெடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் ராஜ்குமார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ராஜ்குமார். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.