Categories
சினிமா

நான் மதுபோதையில் உளறினேன்!…. பைத்தியம் போல் சிரித்தேன்!…. வருத்தம் தெரிவித்த நடிகர்…..!!!!

தெலுங்கில் வந்த அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோன்று தெலுங்கில் அவர் நடித்த டியர் காமரேட் திரைப்படம் தமிழிலும் வந்தது. இப்போது இந்தியில் லைகர், தெலுங்கில் குஷி, ஜனகன மன போன்ற படங்களில் நடித்து வருகிறார். தன்னை குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசிவரும் விஜய் தேவரகொண்டா தனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது எனவும் போதையில் இருந்ததால் படப்பிடிப்பை ரத்துசெய்த சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தேவரகோண்டா அளித்துள்ள பேட்டியில் “எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சி விருந்துக்கு சென்று குடித்துவிட்டுவந்தேன். அதன்பின் காலையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். அப்போது போதை குறையாமலேயே எழுந்து படப்பிடிப்புக்கு சென்றேன். இந்நிலையில் படத்தின் கதாபாத்திரத்துக்காகவும் குடிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக எனக்கு போதை அதிமாகியது. அதனை தொடர்ந்து வசனம் சொல்ல மறந்து உளற ஆரம்பித்தேன். பைத்தியக்காரன்போன்று சிரிக்கவும் செய்தேன். இதனால் வேறு வழியின்றி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டனர்” என்று கூறினார்.

Categories

Tech |