கணவன்-மனைவி இடையே நடந்த சண்டையினால் பெண் தற்கொலை.
தூத்துக்குடியில் உள்ள சுனாமி காலனி சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரை காதல் திருமணம் செய்தவர் ஜாஸ்மின். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கை வெறுத்து மனமுடைந்த ஜாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்ய எண்ணி விஷத்தைக் குடித்து மயங்கியுள்ளார்.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஜாஸ்மினை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜாஸ்மின் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.