திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அந்த மாணவியின் தாய் உயிரிழந்தார். அன்று முதல் அந்த மாணவி தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவ, மாணவியரே! தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள்!
Categories