புலிக்கொடி தேவன்
இயக்குனர் : எஸ்.பி.ராஜ் பிரபு
ஒளிப்பதிவு : சமித் சந்துரு
இசை : ஜீவன் மயில்
கதாநாயகர்கள் : குணா, மைக்கேல் சசிகுமார்
கதாநாயகிகள் : கிருத்திகா, அமலா மரியா
ஊரில் ஜாதியில் உயர்ந்தவரின் தங்கையை தாழ்ந்த சாதி இளைஞன் காதலித்துள்ளார். தங்கையை தாழ்ந்த சாதி இளைஞன் காதலிப்பது தெரிந்து அண்ணனின் ஜாதிவெறி காதலர்களை என்ன செய்தது எனும் கதை ஒரு பக்கம்.
மேல் ஜாதியை சேர்ந்த பெண்ணும் கீழ் ஜாதியை சேர்ந்த இளைஞனும் காதலித்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் தந்தை தன் வீட்டில் உள்ளவர்களிடம் சம்மதம் வாங்கிக்கொண்டு பெண்ணை கொலை செய்ய காதலி இறந்த துக்கத்தால் மனநலம் பாதிக்கப்படும் காதலன் எனும் கதை மறு பக்கம்.
இந்த இரு கதைகளுக்கும் உள்ள தொடர்பே இத்திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகர்களாக குணாவும் மைக்கில் சசிகுமாரும் அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கதாநாயகிகளாக கிருத்திகா, அமலா, மரியா மூவரும் குழந்தை தனத்தை வெளிப்படுத்தி இருப்பது அவர்களின் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
ஜாதியில் உரிய ஜாதி வெறி பிடித்தவராக முறுக்கு மீசை கம்பீரமான தோற்றம் என வேலா கிருஷ்ணசாமி தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகன் குணாவிற்கு அண்ணனாக வரும் அருள் அன்பழகனும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
இரண்டு ஜாதி வெறி பிடித்தவர்களின் கோபத்தால் தடம்புரண்டு போகும் காதலை மையமாகக்கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எஸ் பி ராஜ் பிரபு. திரைப்படத்தில் காமெடி காட்சிகள் இன்னும் இடம்பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் வகையில் உள்ளது.
“கடவுள் இருக்கான் குமாரு”, “கள்ளி என் கள்ளி” எனும் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது.
திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் சந்துருவின் பங்கும் நேர்த்தியை கொடுத்துள்ளது.
மொத்தத்தில் காதலையும் ஜாதியையும் படுத்தும் பாடே “புலிக்கொடி தேவன்” திரைப்படம்