தமிழில் 2002ல் வெளியாகிய “பைவ் ஸ்டார்” திரைப்படம் வாயிலாக அறிமுகமான பிரசன்னா பின், அழகிய தீயே, கஸ்தூரிமான், கண்ட நாள் முதல், சீனா தானா, சாதுமிரண்டா, கண்ணும் கண்ணும், முரண், மாபியா ஆகிய பல படங்களில் நடித்து இருக்கிறார். மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அப்போது அவரது வில்லன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. மேலும் அவர் திருட்டுபயலே 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அத்துடன் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது துப்பறிவாளன் 2ஆம் பாகம் படம் இவரின் கைவசம் இருக்கிறது. இந்த நிலையில் பிரசன்னாவுக்கு இந்தி வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் நடிக்கும் மகிழ்ச்சியை சமூகவலைத்தலத்தில் பிரசன்னா பகிர்ந்து இருந்தார். இதன் வாயிலாக பிரசன்னாவுக்கு அடுத்தடுத்து இந்தி வாய்ப்புகளானது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பிரசன்னாவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.