இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான தொழில் சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன் இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றார். மேலும் இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் இந்திய பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்றார். அதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, இது மிகவும் முக்கியமான விவகாரம் ஒட்டுமொத்த மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம். இலவசங்களை நிறுத்த எந்த அரசியல் கட்சிகளும் நினைக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இலவசங்கள் தொடர வேண்டும்.
இந்த விவகாரத்தில் நீண்ட விவாதம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய நிதி ஆணையம், நிதி ஆயோக் ஆளு மற்றும் எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழு தேர்தல் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள், அவற்றை ஒழுங்குமுறை படுத்துவதற்கான யோசனைகளை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் குழு அமைப்பது அதன் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு தேர்தல் ஆணையம் மாநிலங்களவை எம்பி கபில் சிவில் மற்றும் மனுதாரர் தங்கள் யோசனைகளை அடுத்த 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.