Categories
தேசிய செய்திகள்

கடத்தல்காரர்கலிடம்இருந்து 183 சிறுவர், சிறுமிகள் மீட்பு…. ரயில்வே பாதுகாப்பு அதிரடி….!!!

இந்தியாவில் ரயில்யிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனிதக்கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது தங்களிடம் சிக்குபவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்து செலவில், அதிக தொலைவிற்கு பயணம் செய்து கடத்திச் செல்வதற்காக ரயில்வே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடமிருந்து 2,178 பேரை மீட்டு உள்ளனர். குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர் என பாதுகாப்பும், கவனமும் தேவைப்பட்ட 65,000 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு உதவிகளையும் செய்து அவர்களை துயரிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு பகுதியாக கடந்த ஜூலை சிறப்பு ஒரு மாத கால மனித கடத்தல் தடுப்பு நடிக்க ரயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்டது. இதற்காக அந்தந்த மாநில போலீசார இணைந்து படையினர் பணிபுரியும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து உடனுக்குடன் கடத்தல் வழக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் செயலாற்றுவது, கடத்தல்களை கண்டறிவது ஆகிய பணிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். அதன்படி 151 சிறுவர்கள், 32 சிறுமிகள் மற்றும் 3 பெண்களை கடத்தல்காரர்களிடமிருந்து மீட்டு உள்ளனர். அதுமட்டுமில்லாமல் தொடர்புடைய கடத்தல்காரர்கள் 47 பேர் கைது செய்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த கடத்தலுக்கு பின்னர் குறிப்பிடும் படியாக பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், விபசாரம், கொத்தடிம்மை, தொழிலுக்கு தள்ளுவது, கட்டாய திருமண, வலுக்கட்டாய அடிப்படையில் அடிமையாக விட்டு வேலையில் ஈடுபடுத்துதல், தத்து கொடுத்தல், பிச்சை எடுத்தல், உறுப்பு மாற்று சிகிச்சை மற் போதை போல் கடத்தல் ஆகியவற்றுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் குற்றம் நடைமுறைகளில் ஈடுபடுவதும் பெருமளவில் மனித உரிமைகளை மீறும் தெரிந்த ஒன்றாகும்.

Categories

Tech |