Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த தொழிலாளி…. சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியிடம் தங்கச்சங்கிலியை பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான சோமசுந்தரம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு சோமசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சோமசுந்தரம் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து சோமசுந்தரம் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வெள்ளூர் பகுதியில் வசிக்கும் ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |