இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் நக்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண் கடந்த 30-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதே பகுதியில் வசிக்கும் 4 பேர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இளம்பெண் காவல் நிலையத்தில் 4 பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.