Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி தண்டோரா தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு அதிரடி உத்தரவு….!!!!

அறிவியல் வளர்ந்து தொழில்நுட்பம் பெருகிவிட்டதால் தமிழகத்தில்  தண்டோரா போடுவது இனி தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் இதை அன்பு தெரிவித்துள்ளார் .அதற்கு பதிலாக ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி மூலை  முடுக்குகளில் எல்லாம் தகவல்களை கொண்டு சேர்க்கலாம் எனவும் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக சேர்க்கும் விதமாக இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருக்கிறது.

அதனை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுத்துவதை கண்டேன். தற்போது அறிவியல் வளர்ந்து விட்டது தொழில்நுட்பமும் பெருகிவிட்டது. எனவே இந்த சூழலில் தண்டோரா போடுவது இன்னும் தொடர வேண்டிய அவசியமில்லை.அதற்கு பதிலாக ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி பலம் பெற செய்வதன் மூலம் மூளை முடுக்குகளில் எல்லாம் தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம். எனவே தண்டோரா போட கடுமையாக தடை விதிப்பது நல்லது இதனை மீறி ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |