பேருந்து சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூரேத் ஆமின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் தியானா என்ற குழந்தை இருந்தது. தற்போது ராஜ்குமார் ராக்கியாபாளையம் மகாலட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் ராஜ்குமார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி, மகளுடன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் புறத்தில் மகளை அமர வைத்து அழைத்து சென்றபோது ராசாத்தா குட்டை அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த தனியார் பனியன் கம்பெனி பேருந்து ராஜ்குமார் ராஜ்குமார் மீது மோதியது.
இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த 1 வயது குழந்தை மீது பேருந்து சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.