Categories
தேசிய செய்திகள்

போலி செய்தியை எப்படி கண்டுபிடிக்கணும்?…. எஸ்பிஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்திகளை அவ்வப்போது அனுப்புகிறது. இப்போதும் எஸ்பிஐ தன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி மோசடியைத் தவிர்ப்பதற்கான எளிய வழிகளை வழங்கி இருக்கிறது. அதாவது வங்கி அனுப்புவதாக பல மோசடியான செய்திகள் அவ்வப்போது வருகிறது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் முழுத் தொகையும் காலியாகிவிடக்கூடும். எஸ்பிஐ -யில் இருந்து எந்த செய்தி வந்தாலும் அதில் SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB ஆகிய தேவையான குறியீடுகள் இருக்கும் என எஸ்பிஐ ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது.

இக்குறியீடுகளை உடைய செய்திகளை நீங்கள் பெற்றால், அது வங்கியினுடைய அதிகாரப்பூர்வமான செய்தி என்று அர்த்தம் ஆகும். இதற்கிடையில் வங்கி உங்களுக்கு எவ்வாறு செய்தி அனுப்புகிறதோ, அதே முறையை கடைபிடித்து சைபர் மோசடி செய்பவர்களும் உங்களுக்கு செய்தி அனுப்புகிறார்கள். இந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் வங்கியின் செய்தி என்று நம்பிவிடுகிறார்கள். மேலும் தங்களது விபரங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இதன் வாயிலாக பல விபரங்கள் கசிந்துள்ளது. எந்த ஒரு தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஓடிபி-யை வங்கி வாடிக்கையாளர்களிடம் கேட்காது. வங்கியிடம் இருந்து எந்த நேரத்திலும் கெஒய்சி விபரங்கள் கேட்கப்படாது. எந்தஒரு வங்கியும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யும்படி வாடிக்கையாளர்களிடம் கூறாது. வங்கியிலிருந்து வரும் செய்தி போலியானதா (அல்லது) உண்மையானதா என்பதை கண்டறியவேண்டுமானால் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

# வங்கிகளிலிருந்து அனுப்பக்கூடிய செய்திகளில் தவறு இருக்காது. அதே நேரம் மோசடி செய்திகளில் பல்வேறு தவறுகள் இருக்கும். இந்த போலி செய்திகளில் கிராமர் மிஸ்டேக்ஸ் அதாவது இலக்கண பிழைகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

# வங்கிகள் (அல்லது) பிற நிதிநிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்புகிறது. பெரும்பாலும் உங்களுக்கு கணக்கில்லாத வங்கிகளிலிருந்தும் செய்திகள் வருவதுண்டு. இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

# வங்கியிலிருந்து செய்தி அனுப்பப்பட்டால், அனுப்புநரில் மொபைல்எண் காட்டப்படாது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது பான் எண்ணை கொடுக்கப்பட்ட இணைப்பில் புதுப்பிக்கவில்லை எனில் அவர்களின் ‘YONO’ கணக்கு தடுக்கப்படும் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. YONO என்பது எஸ்பிஐ-ன் டிஜிட்டல் பேங்கிங் தளம் ஆகும். அந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள போலி இணைப்பு ஒரு எஸ்பிஐ பக்கத்திற்கு செல்லும். இவற்றில் பயனாளர்கள் முக்கிய தகவல்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவார்கள். அவ்வாறு பயனர்கள் தங்களது விபரங்களை அதில் உள்ளிடும்போது, ​​அவர்களின் தகவல் ஹேக்கர்களை சென்றடைகிறது. இதில் ஹேக்கர்கள் பயனாளர்களின் மொத்த தொகையையும் காலியாக்குகிறார்கள்.

Categories

Tech |