பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட் தனது வீட்டை ஏழு கோடி ரூபாய்க்கு விற்று இருக்கின்றார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் அவரை பிரிந்துள்ளார். ஜானி டெப் தன்னை சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்பர் மீது ஜானிடெப் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அத்துடன் பொய் புகார் அளித்ததால் ரூபாய் 116 கோடியை ஜானிக்கு அம்பர் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் தன்னிடம் பணம் இல்லை என அம்பர் தெரிவித்துள்ளார். தனக்கு பணம் தேவையில்லை தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டதே போதும் என ஜான் கூறியுள்ளார். இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டை ஏழு கோடியை 86 லட்சம் ரூபாய்க்கு 50 விற்றுள்ளார். இதில் 40 லட்சம் அவருக்கு லாபம் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. வாழ்ந்து வந்த வீட்டையே விற்கும் அளவிற்கு அம்பர் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் எனவும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.