ஆங்கிலேயரால் வெல்ல முடியாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலையின் 217 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பெரிய மக்கள் படையை உருவாக்கி வெள்ளையர்களை எதிர்த்தவர் தீரன் சின்னமலை. இன்றைய நாளில் உறுதி ஏற்று அதனை செயல்படுத்துவது தான் அவருக்கும் தரும் உண்மையான மரியாதை. பெரியார் மண், அண்ணாமண் என்று சொல்லிக்கொண்டு எதையும் செய்யாமல் இருக்கின்றனர். பெரியார் இருப்பார் ஆனால் மண் இருக்காது.
சீமானுக்கு வாய் கொழுப்பு அதிகம் என ஜெயக்குமார் விமர்சனம் தொடர்பாக எனக்கு வாய்க்கொழுப்பு ஜெயக்குமாருக்கு பண கொழுப்பு அண்ணன் ஜெயக்குமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது அதை கெடுத்து கொள்ளக்கூடாது. மேலும் ஸ்டாலினை பேசினாலும், பாஜகவை பேசினாலும் காலையில் வீட்டிற்கு சோதனைக்கு வந்து விடுவார்கள் அந்த பயம் தான் ஆனால் என்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என் உயிரைத் தவிர நான் அவரை அண்ணன் என மதிக்கின்றேன். அதனால் என்னை பேசுகிறார் நீங்கள் பணத்தை முன்னிறுத்துகின்றீர்கள். நாங்கள் மானமுள்ள இனத்தை முன்னிறுத்துகின்றோம் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யட்டும் அண்ணன் ஜெயக்குமார் வரட்டும் நானும் வருகிறேன். யாருக்கு விளைவு என பார்த்துக் கொள்ளலாம் அதிமுக, திமுக, பிஜேபி என யாருக்கும் தனித்து போட்டியிட திராணி இல்லை. ஆனால் எங்களுக்கு இருக்கிறது. நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்றால் மக்களை நம்ப வேண்டும்.
நீங்கள் மக்களை நம்பவில்லை உறுதியான கோட்பாடு இருந்ததால் அதை வைத்து மக்களிடம் வாக்கு கேளுங்கள். ஆனால் இது உங்களிடம் இல்லை, கோடிகள் தான் இருக்கிறது திராவிடம் என்றால் என்ன என விளக்கம் சொல்ல முடியாத கோட்பாட்டை கொண்டிருக்கின்றீர்கள். மேலும் நாட்டையே அதானி அம்பானிக்கு விற்பனை செய்து விடுகின்றனர். மோடி டீ விற்றார் என்று சொல்வதையும் நம்பும் மக்கள் மோடி நாட்டை விற்கிறார் என சொல்வதை நம்புவதில்லை. 5 மாநில தேர்தல் வரவில்லை என்றால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்க மாட்டார்கள் அனைத்திற்கும் விலை உயர்த்தி இருக்கின்றனர். ஜி எஸ் டி யை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுக்கின்றோம் என கூறுகின்றார்கள் எதற்கு இங்கிருந்து வாங்குகிறீர்கள் அப்புறம் எதற்கு நீங்கள் திரும்ப கொடுக்கிறீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.