நடிகர் நாக சைதன்யாவிடம் சோபிதா துலிபாலா குறித்து கேள்வி கேட்கப்பட்ட பொழுது வெட்கத்தில் நெளிந்திருக்கின்றார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக செய்தி வெளியாகி வருகின்றது.
மேலும் சோபிதா உடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் அவருடன் அதிக நேரம் செலவழிப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து சோபிதா தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்று நீண்ட நேரம் அவருடன் செலவிடுவதாகவும் தகவல் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்து இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகின்றார்கள். இந்த நிலையில் நாகா சைதன்யா லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படமானது வருகின்ற 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான பிரமோஷன் பணிகளில் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன் விளைவாக ஆர்.ஜே சித்தார்த் கண்ணனுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நாகா சைதன்யா. அப்போது சோபிதா துலிபாலா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாக சைதன்யா வெட்கத்தில் சிரித்து மலுப்பினார். மேலும் நான் சிரிக்கின்றேன் என பதிலளித்தார். தற்பொழுது சினிமா வட்டாரத்தில் இது குறித்து தான் பேசப்பட்டு வருகின்றது.