Categories
தேசிய செய்திகள்

“குரங்கு அம்மை தொடர்பான அறிவுறுத்தல்கள்”….. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை….!!!

குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. எனவே இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது. அந்த வகையில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை உள்ளிட்ட வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

குரங்கு அம்மை வந்தால் செய்ய வேண்டியவை: 

குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்தால் அவரை உடனடியாக தனிமை படுத்த வேண்டும்.

தொற்று பரவாமல் தடுக்க சானிடைசரை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.

முகத்தை நன்றாக முகக்வசத்தால் மூடிக் கொண்டு கைகளில் கையுறை அணிந்துதான் நோயாளிடம் சொல்ல வேண்டும்.

சுற்றுப்புறங்கள் அதை முழுவதும் சானிடைசர் தெளிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை :

நோயாளிகளின் ஆடைகள், பயன்படுத்திய படுக்கை, போர்வை , துண்டு என எதையும் மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

நோயாளிகள் பயன்படுத்திய ஆடைகளை நோய் இல்லாதவர்கள் துணியுடன் சேர்த்து வைத்து துவைக்காமல் தனியாக துவைக்க வேண்டும்.

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களில் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

whatsapp வதந்திகள் மூலம் தவறான தகவல்களை நம்பிக் கொண்டு நோயாளிகளை ஒதுக்கி வைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |