Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி குறித்து பரவி வரும் வதந்தி”…. ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ….? சந்தேகத்தில் ரசிகாஸ்….!!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றி பரவி வரும் வதந்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கின்றது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக் கொடுக்க  திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்தில் வீடியோ கவரேஜ் உரிமையை 25 கோடி ரூபாய் கொடுத்து  நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியது. இதையடுத்து திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் பதிவிட்டார். ஜவான் திரைப்படத்திற்காக மும்பைக்குச் சென்ற நயன் சென்னைக்கு திரும்பி வந்து கனவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் கணவரை விட்டு பிரிய மனசில்லாமல் பிரேக் எடுத்து வந்திருக்கின்றார் என நயனை பாராட்டினார்கள்.

இந்த நிலையில் நயனுக்கும் விக்கிக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக சென்ற சில நாட்களாக பேச்சு கிளம்பியுள்ளது. விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பாக அடிக்கடி தங்கமே , கண்மணியே என இன்ஸ்டாவில் பதிவுவிட்டு வந்த நிலையில் தற்போது ஏன் அமைதியாக இருக்கின்றார்? ஒருவேளை பிரச்சனையாக இருக்குமோ? என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நயன்தாரா பற்றி அடிக்கடி வதந்திகள் வெளியாவதால் இந்த பிரச்சனை கூட ஒரு வதந்தியாக இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |