கோப்ரா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, மியா ஜார்ஜ், இர்பான் பதான், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்து.
இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பியோனாவின் படத்தை வெளியிட்டு கோப்ரா என பதிவு செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Cobra 🐍 pic.twitter.com/cGk5NN3PCi
— A.R.Rahman (@arrahman) August 3, 2022