ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா திமுக சார்பில் தொடர்ந்து இது போல் எல்லா இடங்களிலும் அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் சார்பாக அதிமுக என்பது ஒரே இயக்கம் தான், தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. நான் கேட்டிருந்தேன் அந்த கடிதத்தில் 1.12.2021 ஆம் தேதியில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் இருக்கிறார்கள் கட்சி தலைமைக்கு….
வேறு யாரும் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் இடைப்பட்ட காலத்தில் நடந்த இந்த கூத்துகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையத்தில் பதிவாகவில்லை, அதனால் கட்சியினுடைய தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தான். நாங்கள் தகவல் அறியும் சட்டப்படி கடிதம் அனுப்பி வாங்கி இருக்கிறோம், தனிப்பட்ட அழைப்பெல்லாம் இல்லை. அண்ணா திமுகவினுடைய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அவர் வந்து தேர்தல் ஆணையத்தில் அவர் பெயரில் தான் கட்சி இருக்கிறது, அதனால் அவர் கடிதம் கொடுத்தார். நாங்கள் கலந்து கொண்டோம். எனவே நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது…
நாங்கள் தான் அதிமுக. வந்தவுங்க யாருனு தெரியாது. அதனால அதப்பத்தி கவலையில்லை என ஜெயக்குமார் சொல்கிற கருத்து எனக்கு தெரியாது. அவர் எப்ப வேண்டுமானாலும், எது வேண்டாலும் சொல்லிக் கொண்டிருப்பார். தேர்தல் ஆணையத்தில், இப்போது அவரே கடிதம் எழுத சொல்லுங்க. தகவல் அறியும் சட்டத்தில் மூலம் கேட்க சொல்லுங்கள், அதிமுகவில் அவருடைய எடப்பாடி பெயரில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை தவிர வேறு எங்கேயாவது இருக்கிறதா ? என்று சொல்ல சொல்லுங்கள், நான் அதற்கு பதில் சொல்கிறேன்.
அதிமுக என்ற பெயர் பலகையை ஜெயக்குமார் ஒன்றும் எடுக்கவில்லை. அவர் கையில் வைத்து நகர்த்தி வைத்தார். தரம் இல்லாத செயல்பாடுகளை செய்பவர்களை வந்து, தரமான மனிதர் வந்து கண்டுக்க மாட்டார்கள், அதெல்லாம் ஒரு கேவலமான செயல். இதெல்லாம் ஒரு செயலா ? கேவலம் இல்லையா ? ஒரு அமைச்சராக இருந்து எம்எல்ஏவாக இருந்தவருக்கு இது ஒரு கேவலமாக இல்லை. நீங்கள் அண்ணா திமுகவா ? முதலில் இல்லையே. அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நடத்துகிறார். அதாவது சிங்கம் சிங்கிளாக தான் வரும் என தெரிவித்தார்.