சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரகாசபுரம் சாலையில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜ் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் தர்மராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.