மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும்.
காதலில் பயப்படக்கூடிய சூழ்நிலை இன்று இருக்கும். இன்று உற்றார் உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்