இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளுடைய வீரத்தை போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து ஆகஸ்ட் 5 முதல் 15ஆம் தேதி வரை அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மக்கள் இலவசமாக நினைவுச் சின்னங்களை பார்வையிடலாம். சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.