Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி கோட்டைவிட்டுட்டீங்களேப்பா… ஏன் இப்படி எங்கேங்கோ சுத்தி போறீங்க ..!! நச்சுன்னு கேட்ட ஜெயக்குமார்..!!

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வந்து இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தாரு. அதாவது,

ஏற்கனவே  இபிஎஸ் அவர்கள் வந்துட்டு தமிழர்களுடைய முதலீடுகள் வந்துட்டு வெளி மாநிலத்துக்கு செல்வதா சொல்லிட்டு நீங்க அறை குறையாக அறிக்கை வெளியிடாதீங்கனு அவர் எச்சரித்து சொல்லறாரு என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டப்பாக்குக்கு விலை சொன்னாங்களாம். அது ஒரு பழமொழி. பொள்ளாச்சி சரியா பழமொழி சொல்றாரு, என்னவிட பழமொழில எக்ஸ்பெக்ட் போல, . அவர் கேட்டது என்ன ? 2 லட்சம் கோடி போச்சுப்பா? இரண்டு லட்சம் பேருக்கு வேலை போச்சுப்பா?

இன்றைக்கு வந்து உலக அளவில் செமி கண்டக்டருக்கு அவ்வளவு டிமாண்ட் இருக்கு அவ்வளவு மார்க்கெட்டிங் இருக்குது, மார்க்கெட்டிங் வந்து இங்கே இருக்கின்ற பாக்ஸ்கானும், நம்முடைய வேதாந்தாவும் தொழில் செய்ய முன்வரும்போது அவர்களை ஊக்கப்படுத்துவதை விட்டுட்டு இப்படி கோட்டைவிட்டுட்டீங்களேப்பா  அப்படி என்று கேட்டால், அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் எப்டி எப்படியோ சுத்தி எங்க எங்கேயோ போறாரு. அப்போது அண்ணன் சொன்ன மாதிரி கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இந்த மூன்று தான் அதுதான் காரணம் என விமர்சித்தார்.

Categories

Tech |