மின்சாரம் தாக்கி மக்கள் நல பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் மக்கள் நல பணியாளரான சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மின்சார கம்பத்திலிருந்து ஒரு கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் சக்கரவர்த்தி அந்த கம்பியை தனது காலால் மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சு தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்கரவர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.