பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் ஒத்தவாடை தெருவில் பெயிண்டரான சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் வருமானம் குறைவாக இருந்ததால் சந்திரசேகர் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் குடும்ப செலவிற்காக சந்திராசேகர் கடன் வாங்கியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சந்திரசேகர் தனது வீட்டின் 3-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சந்திரசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.