Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….. புகார் செய்ய புதிய வசதி….. SBI வெளியிட்ட தகவல்…..!!!

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியில் புதிதாக கணக்குத் திறக்கும்போது அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் பொழுது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து விளக்கங்களை வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் கள்.

இந்நிலையில் மேலும், நீங்களும் பாரத ஸ்டேட் வங்கி குறித்து புகார் அளிக்க விரும்பினால் https://crcf.sbi.co.in/ccf/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1800 1234, 1800 2100, 1800 11 2211, 1800 425 3800, 080-26599990 என்கிற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்படி பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கணக்கு தொடரலாம் என்பதை பார்க்கலாம். முதலில் உங்களுக்கு அருகிலுள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்குச் செல்லவும்.

இதனையடுத்து, வங்கி நிர்வாகிகளிடம் கணக்கு திறப்பதற்கான படிவத்தை வாங்கவும். பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக பதிவு செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் KYC ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் பொருந்த வேண்டும். இதற்கு பிறகு வாடிக்கையாளர் கட்டாயமாக குறைந்தபட்சமாக ரூ.1,000 டெபாசிட் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை முடித்த பிறகு இலவசமாக பாஸ்புக் மற்றும் காசோலை புத்தகம் வழங்கப்படும். இதே போல YONO இணையதளத்தின் மூலமாகவும் ஆன்லைன் மூலமாக கணக்கை துவங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |