Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காரை சேதப்படுத்திய காட்டு யானை…. வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

காட்டு யானை காரை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தாலுகா பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் தினமும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு காட்டு யானை நேற்று காலை 7 மணிக்கு கல்லிங்கரை பகுதியில் நுழைந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவாஷ் என்பவரது காரை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து பொதுமக்கள் ஒன்று சேர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டை கடந்து சென்று காட்டி யானை 4-ஆம் மைல் பகுதியை அடைந்தது.

இதுகுறித்து அறிந்த கூடலூர் வனவர் செல்லதுரை தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் நுழைவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் காட்டு யானை நுழைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

Categories

Tech |