Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற எருதுகுட்டை கோவில்…. நடைபெற்ற மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி  திருக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கொராலப்பன்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எருதுகுட்டை சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக கிராமத்தில் அமைந்துள்ள பொது கிணற்றிலிருந்து கரகம் பாலிக்கப்பட்டு மேலதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் எருதுகுட்டை சுவாமிக்கு புனித நீர், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதன்பின்னர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் சாமியை  வழிபட்டனர். இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மாடு மாலை தாண்டும்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டு காளை மாடுகள் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் அந்த மாடுகள் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்று பூஜை செய்து ஓட விட்டனர். இதில் முதலாவதாக ஓடி வந்த மாட்டிற்கு சிறப்பு பிரசாதமாக எலுமிச்சை பழம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |