Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெரும் நாளாக இருக்கும்..இன்றைய முழு ராசிபலன் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். இன்று  முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். திருப்திகரமாகவும்  இருக்கும்.

உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வயிறு கோளாறு போன்றவை ஏற்படும். தூக்கம் குறையலாம், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். எதிர்பாலினரிடம் நட்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். இன்று  மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடங்களை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு. இன்று  முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் பச்சை

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தனலாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று  எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்து சேரும். தடை தாமதம் அனைத்து விஷயங்களிலும் நீங்கும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள், குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை பெரிது படுத்தாமல் இருப்பது ரொம்ப நல்லது.

இன்று வாக்குவாதத்தில் மட்டும் தயவுசெய்து ஈடுபட வேண்டாம். இன்று  மாணவர்கள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான  திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று  மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும்.

காதலில் பயப்படக்கூடிய சூழ்நிலை இன்று இருக்கும். இன்று உற்றார் உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்டமான  திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

 

கடகம் ராசி அன்பர்களே, இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மனோ தைரியம் கூடும்.

செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. வாகனங்களால் செலவு கொஞ்சம் இருக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து, வீண் அலைச்சலும் குறையும்.

ஆனால் பணியைப் பற்றிய சிந்தனை மட்டும் இருக்கும். இன்று  உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் இருக்கும், கவலை வேண்டாம். எந்தவித பிரச்சனைகளும் இன்றி துணிந்து நீங்கள் சமாளித்து விடுவீர்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக போராட வேண்டியிருக்கும். கல்வியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

விளையாடிவிட்டு கல்வியில் மட்டும் இன்று கவனத்தை செலுத்தினால் வெற்றி பெறமுடியும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அன்புக்குரியவரை நீங்கள் சந்திக்கக்கூடும். அன்புக்குரியகளுக்கு நீங்கள் உங்களுடைய தேவையை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை செழிக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.

இன்று  இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரியங்களில் தடைகள் சந்திக்கக்கூடும். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்கள் அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை கூட ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.

தந்தை மூலம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் ஒழுங்காகத்தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும் ஓரளவு வந்து சேரும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

 

கன்னி ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி கூடும் நாளாகத்தான் இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிடப் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். இன்று கணவன், மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பணம் விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பதும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப சிறப்பாகவே பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.  இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள், உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

துலாம் ராசி அன்பர்களே,  இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி கூடும், நாளாகத்தான் இருக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாகத்தான் நடக்கும்.

முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மெத்தனப்போக்கு கொஞ்சம் மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலனையும் கொடுக்கும்.இன்று மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கொஞ்சம் கடினமாக இருக்கலாம்.

கூடுதல் முயற்சி செய்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை தயவு செய்து எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை டிராக் வெள்ளை நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று எவருக்கும் வாக்குறுதிகளை மட்டும் தரவேண்டாம், தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகும், தொந்தரவைக் கொடுக்கும். முக்கியமான செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். சீரான ஓய்வு, உடல் நலத்தை பாதுகாக்க உதவும். இன்று தொழில் வியாபாரத்தில் நன்றாகவே நடக்கும்.

வாக்கு வன்மையால் லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். வீண் செலவு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி பிறக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும்.

சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் மீண்டும் ஒருமுறை எவருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். இன்று  மாணவச் செல்வங்கள் கல்விக்காக  கடுமையாகவே உழைப்பார்கள். உழைப்பது மட்டும் இல்லை நீங்கள் படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.

எழுதிப் பார்ப்பது தான் மிகப் பெரியது, எழுதி பார்க்கும் பொழுது நினைவில் வைத்துக்கொள்ள உதவும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீலம்

 

தனுசு ராசி அன்பர்களே, இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கூடும். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு விரயம் உண்டாகும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். அடிக்கடி கனவு தொல்லைகள் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.

பழைய பாக்கிகள் ஓரளவு சீராகும். புதிய ஆர்டர்கள் வருவதில் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்புகள் போன்றவற்றை கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று  அனைத்து விஷயத்திலும் சாமர்த்தியமாக ஈடுபடுவீர்கள்.

திருமண முயற்சியில் வெற்றியை கொடுக்கும்.காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும், நாளாகவே இருக்கும். வாகன பராமரிப்பு செலவு குறையும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறுகள்  மாறும். இடம் வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இன்று  குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

நீண்ட நாட்களாக இருந்த குடும்ப தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன்-மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள்.

இன்றைய நாள் ஓரளவு சிறப்பு மிக்க நாளாகத்தான் இருக்கும். பொறுமையை மட்டும் எப்பொழுதும் கடைபிடியுங்கள். வாகனத்தில் செல்லும் போது நிதானமாக செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக தான் நின்று நீங்கள் செயல்பட வேண்டும். யாருக்கும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் தரவேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு  ஊதா நிறம் சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்-:3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் ஊதா நிறம்

கும்பம் ராசி அன்பர்களே, இன்று முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை மேம்படும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும்.

கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

இன்று கூடுமானவரை  நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதுமட்டுமில்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

அதிர்ஷ்டம்  எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே, இன்று கனவுகள் நனவாகும் நாளாகவே இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கம்  விலகிச்செல்லும். ஆரோக்கியம் சீராக இருக்க மாற்று மருத்துவம் கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.

திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரியத்தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். தன்னை தானே உயர்த்திக் கொள்வதும், உயர்வுக்கும் கடுமையாக பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும்.

எல்லாவகையிலும் சுகம் ஏற்படும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். பாடங்களை மட்டும் கவனமாக படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் காரியங்களும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |