மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் செல்வகணபதி நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோட்டம்மாள்(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று மாலை கோட்டம்மாள் அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்ததால் கோட்டம்மாள் மாட்டை வீட்டிற்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி கோட்டம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மாடும் மின்னல் தாக்கி உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.