11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் சுகந்தி(16) என்ற மகளும், அபிஷேக்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சுகந்தி தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக சுகந்தி செல்போனில் ஒரு வாலிபருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை அறிந்த சுகந்தியின் பெற்றோர் படிக்கும் வயதில் இதெல்லாம் தேவையில்லை என கூறி மகளை கண்டித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்து சுகந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவியின் உடலை விட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.