Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆர்.பி உதயகுமாருக்கு பதில் சொல்லும் ஆள் நான் இல்லை – அமைச்சர் பிடிஆர்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர், சென்னை மாநகராட்சியில் 4 லாரி வைத்திருக்கிறார்கள், சூப்பர் சக்கர் என்று அடைப்பு எடுப்பதற்கு வைத்திருக்கிறார்கள். அது பல மாதங்களாக கோரிக்கை வைத்து, ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்கள், அமைச்சர் அண்ணன் நேரு அவர்களிடம் எல்லாம் ஒப்புதல் வாங்கி, அந்த சூப்பர் சர்க்கர் லாரி ஒன்றை மதுரைக்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்ததால் இந்த கன மழை பெய்யும் போது,

உடனடியாக பல இடங்களில் ஏற்கனவே அடைக்கப்பட்ட வடிகால் எல்லாவற்றையும் திறந்து, மண்ணையெல்லாம் எடுத்து சூப்பர் செக்கர் வைத்து சுத்தம் செய்ய முடிந்ததனால் தான் இவ்வளவு சீக்கிரம் தண்ணீரை எடுக்க முடிந்தது.  இதை ஒரு உதாரணமாக வைத்துக் கொண்டு….  இப்போது கூடுதல் மழை பெய்திருந்தால் இது போன்று செயல்படுவது. தொலைநோக்கு பார்வையில் மதுரைக்கு இதுபோன்ற மிஷின் வாங்கி வைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறோம்.

இது நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் எந்த அளவிற்கு பெரிய தொழில் நிறுவனங்கள் வழிகாட்டல்களில் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வருகிறது, உண்மையில் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. சிறுகுறு  நடுநிலை நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற தகவல்…..  சுமார் 2,00,000 முதலீட்டில் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற சூழ்நிலை.

ஸ்மார்ட் சிட்டியில் முறைகேடு என விமர்சனம் செய்த ஆர். பி. உதயகுமாருக்கு  எல்லாம் பதில் சொல்கிற ஆள் நான் இல்ல,ஏற்கனவே விசாரணை கமிஷன் உருவாக்கியுள்ளோம். ஆர் பி உதயகுமார் செய்த ஊழல் எல்லாம் பேச ஆரம்பித்தால் நேரம் பத்தாது என விமர்சித்தார்.

Categories

Tech |