தெள்ளாரில் பள்ளி கழிப்பறை மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்த இருக்கும் தெள்ளாரில் இருக்கும் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் இருக்கின்றது. இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடங்கள் 20 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தற்பொழுது சேதம் அடைந்து சிமெண்ட் ஏடு பெயர்ந்த கட்டிடத்தில் நான்கு வகுப்பறைகள் இயங்கி வருகின்றது. பல இடங்களில் சுவர்கள் பெயர்ந்து இருப்பதால் இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் தரக்கோரி பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்ற பொழுது கழிப்பறை மேற்கூறையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் மாணவிக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த ஒன்றிய குழு தலைவர் கமாலாட்சி இளங்கோவன் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் நலம் விசாரித்தார். மேலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த கழிப்பறையை உடனடியாக பூட்டுப்போடு மாறும், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யுமாறும் தெள்ளார் ஒன்றிய பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.