Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி மாணவர்களே அதிகம்…. அமைச்சர் அன்பில் சொன்ன தகவல்…!!!!

தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் தவறான (தற்கொலை) முடிவுகளை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உடற்கல்வி நேரத்தில் தவறாமல் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும். தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். மாணவர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Categories

Tech |