Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. ராட்சத பள்ளத்தில் பாய்ந்து விபத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட 18 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோகன்ராஜ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விபத்துக்குள்ளான லாரியை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |