Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வியாபாரி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள்”…. திடீரென தீப்பிடிப்பு….!!!!!

வேலூரில் வியாபாரி வீட்டில் நிறுத்த வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மண்டி தெருவில் அரிசி மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். இவரின் வீட்டின் அருகே கார் நிறுத்துவதற்காக தனியாக செட் அமைத்திருக்கின்றார். அதில் அவரின் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தி வைப்பார்.

சம்பவத்தன்று அவரின் செட்டில் ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு கார் வெளியே சென்று விட்டு இரவு 9 மணி அளவில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டிரைவர் சென்று வந்த கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் அது மளமளவென அருகில் பரவியது. இதனால் அருகில் இருந்த கார் மற்றும் ஸ்கூட்டரும் தீப்பிடித்தது. இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தார்கள். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை.

Categories

Tech |