உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இது இல்லாமல் ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் whatsapp பயன்படுத்துகின்றனர். இதில் நிறைய வசதிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் பணம் அனுப்பும் வசதி.
இன்றைய காலத்தில் மக்கள் பெரும்பாலும் பேடிஎம், கூகுள் பேய் மற்றும் போன் பே போன்ற செயலிகளை பணம் அனுப்புவது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் இதற்காக தனி ஒரு செயலி வைத்திருப்பதை விட ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப் மூலம் எளிதில் பணம் அனுப்பலாம். உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எளிதில் பணம் அனுப்ப முடியும்.
இதற்கு முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். உங்களுடைய வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர்களின் காண்டாக்டை ஓபன் செய்து அதில் அட்டாச்மெண்ட் வசதியில் பேமென்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் யுபிஐ விவரங்களை பதிவிட்டு நீங்கள் பணம் அனுப்பலாம்.
உங்களின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் உங்களுடைய போனில் இருக்க வேண்டும்.
Whatsapp மூலமாக பணம் அனுப்புபவர்களுக்கு கேஷ் பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.