Categories
தேசிய செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில்…. 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. துணை ராணுவ பிரிவுகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபீபி, எஸ் எஸ் பி, அசாம் ரைப்பில் மற்றும் NSI ஆகியவை மத்திய ஆயுதப்படைகளின் அங்கமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் பத்து லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் மேற்கண்ட ஆயுதப்படைகளில் கலந்த ஐந்து வருடங்களில் மட்டும் 657 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் நேற்று வெளியிட்டார். அப்போது கடந்த 2021 ஆம் ஆண்டில் 153 வீரர்களும், 2020 ஆம் ஆண்டு 149 வீரர்களும், 2019 ஆம் ஆண்டு 133 வீரர்களும், 2018 ஆம் ஆண்டு 97 வீரர்களும்,2017 ஆம் ஆண்டு 125 வீரர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.அவர் வெளியிட்டுள்ள இந்த தகவல் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

Categories

Tech |