குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நான்காவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகின்றது. நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தது. சில நாட்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கூட்டம் சற்று குறைந்தது. இந்நிலையில் இன்றும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் நான்காவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.