Categories
உலக செய்திகள்

“உணவு சூடாக இல்லை”…. ஆத்திரமடைந்த கஷ்டமர்…. உணவக ஊழியர் சுட்டுக்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!!!!!!!

உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பதற்காக கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்தில் வெப் எனும் 23 வயதான இளைஞர் கெவின் ஹோலோமேன் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மைக்கல் மோர்கன் என்பவரால் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று மோர்கன் தனது தாயார் லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு இருக்கின்றார். முன்னதாக அவரது தாயார் புல் மோர் வாங்கி சென்ற பொரியல் சூடாக இல்லை எனவும் குளிர்ந்த நிலையில் இருந்த உணவை தனக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைப் பற்றி புகார் எழுப்ப அவர் தனது மகன் மோர்கன் மற்றும் அவரது தோழியுடன் கடைக்கு சென்று உள்ளார். அங்கு சென்று அவர்கள் கடையில் உள்ள தொழிலாளர்களை தொந்தரவு செய்ய தொடங்கியுள்ளனர். அவர்களை பார்த்து கேலி செய்து சிரித்த பணியாளர்கள் இதுபற்றி மேலாளர் இடம் பேச கூறியதாக தெரிகின்றது. ஒரு கட்டத்தில் அவருக்கு உணவை வழங்கிய கேவின் உணவகத்திற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த மோர்கனால் கடைக்கு வெளியே சென்ற கெவின் சுடப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனை அடுத்து மோர்கன் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கமெலியா டன்லப் (18) என்ற மோர்கனின் காதலின் மீதும் இரண்டு குற்றவியல் ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பின்னர் அவர்கள் தங்களிடமிருந்து துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மோர்கன் இதற்கு முன் பலமுறை குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரெஞ்சு ப்ரைஸ் எனப்படும் உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பது தொடர்பான தகராறில் மெக்டொனால்ட் கடை ஊழிய சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அமெரிக்காவில் இது போன்ற துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அந்த நாட்டு அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |