கேரளா மாநிலம் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் நிறை புத்தரிசி பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையை எதிர்த்து பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர். இன்று காலை நிறை புத்தரிசி பூஜை விழா தொடங்கி நடைபெற்ற வருகிறது. மேலும் அங்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் முன்பு பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை அதற்கு சாத்தியம் இல்லை என்று பத்தினம் திட்டா கலெக்டர் திவ்யா எஸ்.அய்யர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உயர்நிலைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உயர்தர பகுதிகளுக்கு இரவு பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும, நிறை புத்திரிசி திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது பத்தினம் திட்டா பகுதியில் பம்பை ஆற்றில் வெள்ளக் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளனர்.