Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கால்பந்து போட்டி”…. பங்கேற்ற மாணவ-மாணவிகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்து கழகம் போன்றவை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியானது விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதன் தொடக்கவிழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் செயலாளர் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார். இதையடுத்து மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்கதலைவி சர்மிளா பாலகுரு போன்றோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இப்போட்டியில் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த 21 பள்ளிகளின் 400 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதில் மாணவ-மாணவிகளுக்கு தனித் தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகை ரூபாய்.25 ஆயிரம் மற்றும் வெற்றிகோப்பை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் மேற்கு ரோட்டரிசங்க செயலாளர் ராஜ கோபாலன், குயின்சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் மல்லிகா மற்றும் உறுப்பினர்கள், கால் பந்து கழக பொறுப்பாளர்கள் கலைச் செல்வன், ஈசாக், தங்கத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |